மறைந்த முன்னாள் எம்எல்ஏ குடும்பத்திற்கு பாஜக எம்எல்ஏ ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ குடும்பத்திற்கு பாஜக எம்எல்ஏ ஆறுதல் தெரிவித்தார்.

Update: 2024-03-01 05:58 GMT

 பாஜக எம்எல்ஏ ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கராஜ் கடந்த ஜனவரி மாதம் வயது மூப்பு காரணமாக காலமானார். அப்போது பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் மாணிக்கராஜ் இல்லம் சென்று அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இன்று (மார்ச் 1)ஆறுதல் தெரிவித்தார்.
Tags:    

Similar News