கூடுதல் மதுபான கடை திறக்க பாஜக எதிர்ப்பு
வெள்ளகோவிலில் கூடுதல் மதுபான கடை திறக்க பா. ஜனதா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில் கூடுதல் மதுபான கடை திறக்க பா. ஜனதா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளகோவில் நகர பாஜக தலைவர் அருண்குமார் திருப்பூர் மாவட்ட கலால் துறை மேலாளர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- காங்கேயம் சாலையில் அரசு கால்நடை மருந்தகம் எதிரில் அரசு மதுபான கடை எண் 1903 செயல்பட்டு வந்தது. அருகில் தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகள் இருந்தால் மதுபான கடைக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையில் அடிக்கடி குடிபோதையில் செல்பவர்களுக்கு விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தது.
இது குறித்து தொடர்புகாரின் பெயரில் மதுபான கடை கடந்த வாரம் மூடப்பட்டது. தற்போது அந்த கடையிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் மீண்டும் மதுபான கடை அமைக்க முடிவு செய்து வேலை நடைபெற்று வருகிறது. இந்த மதுபான கடையால் மீண்டும் பொது மக்களுக்கும் வேலைக்குச் சென்று இரவு நேரத்தில் வீடு திரும்பும் பெண்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் எனவே வெள்ளகோவில் நகரில் கூடுதலாக மதுபான கடை திறக்க வேண்டாம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.