சாக்கோட்டையில் பாஜக போராட்டம் ஒத்திவைப்பு

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தனியார் பள்ளிக்கு செல்லும் ஆபத்தான வழிப்பாதையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2024-06-28 01:57 GMT

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தனியார் ஆங்கிலப்பள்ளிக்கு செல்லும் பாதையை சிலர் வழிமறித்துள்ளனர், மாற்றுப்பாதையில் ஆபத்தான நிலையில் மாணவ மாணவியர் சென்று வருகின்றனர். இதற்கு மாற்றுவழி பெற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சதீஷ்குமார், வியாழக்கிழமை சாக்கோட்டையில் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் மாநில செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடத்தப்போவதாக அறிவித்தார்

. தகவல் கிடைத்ததும் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், நாச்சியார் கோயில் காவல் ஆய்வாளர் சுகுணா ஆகியோர் பாஜக வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 10 நாட்களுக்குள் அமைதி கூட்டம் நடத்தி சுமூகமாக முடித்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மாவட்ட தலைவர் சதீஷ்குமார் பேசும்போது போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News