"கரூர் எம்.பி.ஜோதிமணியை 100 நாட்களில் வீட்டுக்கு அனுப்புவோம்" - செந்தில்நாதன் பேட்டி.

கரூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செந்தில்நாதன் வரும் தேர்தலில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை டெப்பாசிட் இழக்க செய்தவதே நோக்கம் என தெரிவித்தார்

Update: 2024-01-01 01:49 GMT

செந்தில்நாதன் பேட்டி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காட்டுமுன்னூர் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவருமான ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து, அவரவர் கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இதில், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்துவதில் அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் கவனம் செலுத்தவில்லை. இதேபோல கரூர் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி கடந்த நாலரை வருடங்களாக தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதே சமயம் 100 நாள் வேலைத்திட்டத்தை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று நடைபெற்ற எங்களது கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், இன்னும் 100 நாட்களில் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைகளை இன்று துவக்கி உள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்க செய்வது தான் எங்களது முதல் பணி என்றார். மேலும், இதற்காக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள , மத்திய அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதற்க்கான பணிகளை இன்று துவக்கி உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அரசியலிலும் பெரும் மாற்றம் ஏற்படும் என்றார் .

Tags:    

Similar News