பாஜகவை தமிழகத்தில் சுண்டு விரலைக் கூட பதிக்க விடக்கூடாது - ப.சிதம்பரம்
பாஜகவை தமிழகத்தில் சுண்டு விரலைக் கூட பதிக்க விடக்கூடாது. பாஜக தமிழகத்தில் கால் பதித்து விட்டால் அடக்கு முறையை கையாளும் என பிரசாரத்தின் போது ப.சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு முத்தான பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால், அந்த அரசுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், நமது கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், பாஜகவை தமிழகத்தில் சுண்டு விரலைக் கூட பதிக்க விடக்கூடாது. பாஜக தமிழகத்தில் கால் பதித்து விட்டால் அடக்கு முறையை கையாளும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் 400 ரூபாயாக உயர்வு, பயிர் காப்பீட்டு திட்டம், கல்விக்கடன் பெற்றவர்களுக்கு அசலும், வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும். இனி கல்வி கடனுக்காக வங்கிகள் வீட்டில் அண்டா குண்டாக்களை அகற்றி ஜப்தி செய்ய முடியாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, சுதந்திரத்தை காப்பாற்ற, நமது மொழியை காப்பாற்ற, நமது கலாச்சாரத்தை காப்பாற்ற, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.