தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் - ஆனந்தன்

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என தமிழக பாஜக ஸ்டார்ட் அப் பிரிவின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.

Update: 2024-06-26 04:29 GMT

செய்தியாளர் சந்திப்பு 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவின் மாநில தலைவர் ஆனந்தன் நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து நேற்று (ஜூன் 25) நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் நாங்கள் தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 20 % வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளோம். வருகின்ற 2026ல் பாஜக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். தமிழகத்தில் திமுக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றார்.
Tags:    

Similar News