சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

அரியலூரில் கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை துறை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-11 03:27 GMT

ஆர்ப்பாட்டம் 

அரியலூர் மாவட்ட நெடுஞ்சாலை கோட்ட அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நீக்கப்பட இருப்பதால் கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் உள்ளது சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் ரூ20,200ம் தர ஊதியமாக ரூபாய் 1900 வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் பட்சத்தில் சுங்க சாவடிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் சுங்கச்சாவடி கட்டணம் தமிழ்நாடு அரசு கஜானாவுக்கே செல்ல வேண்டும் கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை துறை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News