வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

கெங்கவல்லியில் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-21 09:08 GMT

 விவசாயிகள் ஆலோசனை கூட்டம் 

கெங்கவல்லி:கெங்கவல்லி வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் தவமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அட்மா குழு தலைவர் அகிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் கெங்கவல்லி வட்டார விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Tags:    

Similar News