சிலந்தியாறு தடுப்பணை தடுக்க வேண்டும்-விவசாயிகள் வேண்டுகோள்
சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை, தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை எவ்வித அனுமதியும் இன்றி கேரள அரசு தற்பொழுது தொடங்கியுள்ளது.
இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வரத்து குறைந்து, அமராவதி அணையில் பாசன வசதி பெறும் 54,637 ஏக்கர் நிலங்களும் மற்றும் விவசாயிகளுடைய வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும், குறிப்பாக திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு,வாழை, தென்னை, பயிர் செய்து வருகின்றனர் இந்த தடுப்பணை கட்டுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதும் மட்டுமில்லாமல் விவசாயம் செய்து வரும் பரப்பளவு 10,000 ஏக்கர் குறையும் சூழ்நிலை உள்ளது மேலும் இந்த மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் கட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே அமராவதி அணை பாசன விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு, அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு தொடங்கியுள்ள பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.