மதுரையில் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடந்தது.

Update: 2024-05-02 13:31 GMT

மதுரையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடந்தது.


மதுரையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் - தள்ளுமுள்ளு பரபரப்பு. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் வரும் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க அரசாணை வெளியிட்டது, இதன் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 226 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பள்ளிக்கல்வித்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மதுரை திருவள்ளூர் சிலை சந்திப்பில் நூற்றுக்கணக்கானோர் கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள், திருவள்ளூர் சிலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தள்ளி விட்டனர், இதனால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, பின்னர் போராட்டக்காரர்கள் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.
Tags:    

Similar News