காவல் ஆய்வாளரை மாற்ற கோரி முற்றுகை போராட்டம்
அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரை மாற்ற கோரி தமுமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருவாணந்தம், அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்களை வஞ்சிப்பதாகவும் மேலும் தமுமுகவின் தீவிரவாத அமைப்பு எனக் கூறி, அலுவலகம் அமைப்பதற்கு கட்டிட உரிமையாளர்களை இடம் தர விடாமல் தடுப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த பகுதியில் முஸ்லிம்கள் கூட்டு குருபானி என்ற பண்டிகை காலத்தில் கடைபிடித்து வரும் மத முறைகளை தற்போது செய்யக்கூடாது என திருவாணந்தம் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இவரது நடவடிக்கைகள் ஆர்எஸ்எஸ் போன்று உள்ளது எனவும் இது தமிழக அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவது போன்று உள்ளதோடு கூட்டணி கட்சியான தங்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வரும் ஆய்வாளர் திருவாணந்தத்தை மாற்ற கோரி அரியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் தமுமுகவினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் தமுமுகவினர் கூறும் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்