ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழி தடுத்து நிறுத்தம்
ஜேசிபி எந்திர மூலம் குழி தோண்டப்படுவதை வார்டு கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தினர்.;
ஜேசிபி எந்திர மூலம் குழி தோண்டப்படுவதை வார்டு கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தினர்.
திருத்துறைப்பூண்டி ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள கழிவறை செப்டிக்டேங்கில் இருந்து கழிவுநீரை முள்ளியாற்றில் இருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்காலான சேந்தமங்கலம் வாய்க்காலில் விடுவதற்காக ரயில்வே நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி வருகின்றனர். இதனை அறிந்த பகுதி கவுன்சிலர்கள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கழிவுநீரை வாய்க்காலில் விடுவதற்காக தோண்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இது குறித்து உடனடியாக பொதுப்பணித்துறை நகராட்சி அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக நிகழ்வு இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி உள்ளனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.