மீன்வளக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உடல்நல பரிசோதனை மற்றும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-01 04:57 GMT

மீன்வளக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உடல்நலப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 146 மாணவர்களுக்கு உடல்பரிசோதனை நடைபெற்றது. இதில் 2 மருத்துவர்கள் மற்றும் 8 செவிலியர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். கல்லூரியின் முதல்வர் ப. அகிலன் தலைமையேற்று மாணவர்கள் அனைவரும் முழு உடல்பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த முகாமின் மூலம் 146 மாணவர்கள் பயனடைந்தனர். இக்கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் மூலம் இரத்த தானம் முகாம் தூத்துக்குடி இரத்த வங்கி மூலம் நடைபெற்றது. இந்த முகாமில் 30 மாணவர்கள் விருப்பத்துடன் கலந்து கொண்டு 24 யூனிட் இரத்தம் கொடுக்கப்பட்டது. மருத்துவர் சாந்தி, இரத்த வங்கி அலுவலர், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அவரின் குழு இதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

இந்த முகாமினை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் துவக்கி வைத்தார். மேலும் அனைத்து மாணவர்களும் இரத்த தானம் செய்து இரத்த தேவைப்படுவோர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆராய்ச்சி இயக்குநர் ஜெரில் அந்தோணி, மற்றும் நீடித்த மீன்வளர்ப்பு இயக்குநர் பத்மாவதி, ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முகாம் ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகானந்தம், செய்திருந்தார்.

Tags:    

Similar News