பொன்னமராவதியில் ரத்ததான முகாம்!
பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமில் 52 பேர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-01 04:50 GMT
ரத்த தானம் முகாம்
பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வி. புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லயன்ஸ் கிளப், சிட்டி லயன்ஸ் கிளப், ராயல் லயன்ஸ் கிளப், ஷைன் லயன்ஸ் கிளப், கொப்பனாபட்டி ஷைன் லயன்ஸ் கிளப், பாலக்குறிச்சி பிரைடு லயன்ஸ் கிளப், பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை, சிவந்தி சில்க்ஸ், முத்தமிழ்ப்பாசறை, வர்த்தகர் கழகம், ரோட்டரி கிளப், விஸ்வகர்மா சமுதாய நலச்சங்கம் மற்றும் சக்தி மாதர் குழு ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை லயன்ஸ் கிளப் தலைவர்கள் கருப்பையா, சிவக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் தொடங்கிவைத்தனர். முகாமில் 52 பேர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது. வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன், முத்தமிழ் பாசறை தலைவர் மாரிமுத்து, அறங்காவலர் குழு செயலாளர் ராமச்சந்திரன், லயன்ஸ் நிர்வாகிகள் ராமஜெயம், வெள்ளைச்சாமி, பாலசுப்பிரமணி யன், பாஸ்கர், தேனப்பன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.