விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது

Update: 2024-02-15 13:12 GMT

ரத்தான முகாமில் கலந்து கொண்டவர்கள் 

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகிய அமைப்புகள் ஈரோடு மத்திய அரிமா சங்கம் (324ஈ), ஈரோடு மத்திய அரிமா சங்க அறக்கட்டளையுடன் இணைந்து இரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

முன்னதாக வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.சி.ஜெயகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் வி.பி.நல்லசாமி, நிர்வாக அலுவலர் திரு. சி.லோகேஷ் குமார் ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மத்திய அரிமா சங்கத்தின் வட்டாரத் தலைவர் அரிமா திரு. எஸ்.என்.சிவா, செயலாளர் அரிமா திரு.சி.வெங்கட கணேஷ், பொருளாளர் அரிமா திரு. என்.முகமது ஹமீது, ஈரோடு மத்திய அரிமா சங்க அறக்கட்டளையின் தலைவர் அரிமா திரு.ஏ.தேவராஜ், செயலாளர் அரிமா திரு.கே.குமரவேல், முன்னாள் சங்கத் தலைவர் அரிமா திருமிகு.கு.ஜெயஸ்ரீ தேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு அரிமா இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் டி.சித்ரா அவர்கள் இம்முகாமிற்கு மருத்துவ அலுவலராக செயல்பட்டார்.  இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் த.தினேஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ந.மகாதேவி, முனைவர் பி.முரளி, தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ஏ.சுரேஷ், பொறுப்பாளர் திரு.வெ.ரோஹித் இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

Tags:    

Similar News