மே தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

வெள்ளக்கோவிலில் மே தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பு சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.;

Update: 2024-05-02 13:43 GMT

ரத்ததான முகாம் 

மே தினத்தை முன்னிட்டு வெள்ளக்கோவில் ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு மற்றும் மகாத்மா காந்தி அறக்கட்டளை வெள்ளகோவில் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய 55 வது இரத்ததான முகாம் ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் சுமார் 175 பேர் கலந்து கொண்டனர் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பேரிடமிருந்து சுமார் 150 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.தானமாக பெறப்பட்ட இரத்தம் அனைத்தும் தாராபுரம் அரசு இரத்த வங்கிக்காக மருத்துவர் திரு.சத்யராஜ் அவர்களிடம் தானமாக அளிக்கப்பட்டது.

Advertisement

இம்முகாமை அரசு மருத்துவமனை மருத்துவர் திருமதி.ராஜலட்சுமி தலைவர் இரா.ராஜ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பின் தலைவர் முரளி, பெருளாளர் சிவகுமார், செயலாளர் சரவணன் அமைப்பாளர் R.N சரவணபவன் அவர்கள் முன்னிலை வகித்தார்.அறக்கட்டளை உறுப்பினர்கள் கோபிகிருஷ்ணன் சீனீவாசன் மற்றும் கோகுல் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கட்டிடக்கலைஞர்கள் நல சங்கம், வெள்ளை கோவில் மக்கள் மாமன்றம் நண்பர்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கம், ஓம் ஆதிபராசக்தி உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்ட ரத்ததானம் செய்தார்கள். இம்முகாமில் பங்கேற்ற இரத்தக்கொடையாளர்கள் அனைவருக்கும் நினைவுவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News