பாரத் சேவா அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;
Update: 2024-03-10 07:04 GMT
ரத்த தான முகாம்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை வளாகத்தில் 11-ம் ஆண்டாக ரத்ததான முகாம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி இரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
மேலும், முகாமில் பாரத் சேவா அறக்கட்டளை நிர்வாக குழு தலைவர் பாஸ்கரன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் சுகுமார், துணைத்தலைவர் சுரேஷ்குமார், ஆலோசகர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.