அரசு மருத்துவ கல்லூரியில் திமுக சார்பில் இரத்ததான முகாம்
அரசு மருத்துவ கல்லூரியில் திமுக சார்பில் இரத்ததான முகாம். மேயர் துவக்கி வைத்தார் .
Update: 2024-07-05 04:58 GMT
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மருத்துவணி சார்பாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவுவிழா மற்றும் 101 - வது பிறந்த நாளை முன்னிட்டு 101 நபர்கள் இரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற்றது. நாகர்கோவில் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான ரெ.மகேஷ் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மற்றும் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும் , ஆண் , பெண் குருதி கொடையாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் ,மற்றும் மாவட்ட திமுக மருத்துவ அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட , மாநகர, ஒன்றிய, நகர, பகுதி ,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் , மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.