தாராபுரம் வட்ட சித்தப்பணி குழு சார்பில் ரத்ததான முகாம்

தாராபுரத்தில் வட்ட சட்டப் பணி குழு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு நீதிபதி தர்ம பிரபு தொடங்கி வைத்தார்

Update: 2024-04-05 02:55 GMT

ரத்ததான முகாம்

தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு மற்றும் தாராபுரம் அரசு ரத்த வங்கி இணைந்து ரத்ததான முகாமை தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடத்தியது. தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து சான்றிதழ்கள் வழங்கினார். தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு பேசுகையில், ரத்ததான முகாமில் இளைஞர்கள் ரத்த தானம் வழங்க ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முடியும். அதனால் இளைஞர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். தாராபுரம் தலைமை மருத்துவர்டாக்டர் சத்தியராஜ் தலைமையிலான அரசு ஆஸ்பத்திரி மருத்துவக் குழுவினர் ரத்தத்தை சேமித்தனர். அப்போது வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச்செழியன், அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News