இரத்ததான முகாம் நடத்திய வேளாண் கல்லூரி மாணவர்கள்

திருச்சி மாவட்டம் ,உப்பிலியபுரம் பகுதியில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள், எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர்.

Update: 2024-05-17 16:45 GMT

ரத்த தான முகாம் 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் பகுதியில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் மற்றும் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு களப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக உப்பிலியபுரம் பேரூராட்சி பகுதியில் டிவைன் டோனர்ஸ் மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட இரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு முகாமிற்க்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் மாணவ மாணவிகளும் பங்கேற்று உதிர கொடை வழங்கினர்.

இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர், தொகுதி மருத்துவ அதிகாரி,சுகாதார ஆய்வாளர் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் துர்கேஷ்,கோகுலபிரகாசம்,கௌதமன்,குணாளன்,இஷாக்,ஜெயராகவன்,ஜெயந்த் ராஜன்,கார்த்திகேயன் மற்றும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அனுஷா,அபிராமி, ஆக்லின் செரின்,அலமேலு,அனுஷா, அர்ச்சனா, ஆர்த்தி, அருந்ததி,அஷ்வினி, பைரவி அகியோர் கலந்து கொண்டு தொண்டாற்றினர்.

இந்நிகழ்வில் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உதிர கொடை வழங்கினர்.அவர்களை பாராட்டும் பொருட்டு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..

Tags:    

Similar News