அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் துவக்கம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆய்வகத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் ரத்த சுத்திகரிப்பு எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து திறந்து வைத்தார்.
இதுகுறித்து துறையின் டீன் கூறியதாவது:- எங்கள் துறையில் மாணவர்களின் மருத்துவ பயிற்சியை எளிதாக்கும் நோக்கிலும், மாணவர்களின் அடிப்படை திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வகத்தை அனைத்து பிரிவுகளின் கீழ் ஏற்கனவே நிறுவியுள்ளோம்.
தற்போது ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆய்வகத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய கூடுதல் ரத்த சுத்திகரிப்பு எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய எந்திர தொழில்நுட்ப வளர்ச்சியை கையாளும் திறனை மாணவர்களுக்கு மேம்படுத்தி மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றவும், வேலைவாய்ப்பினை பெறவும் வழிவகுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் ரத்த சுத்திகரிப்பு பிரிவு பொறுப்பாளர் ஹேமலதா, ரோஷிணி, சங்கர் ஆகியோர் செய்திருத்தனர்.