கொடைக்கானலில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு குடும்பத்துடன் படகு சவாரி
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு முண்டாசு கட்டியப்படி மழையில் குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்டார்.
Update: 2024-05-18 01:18 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று நண்பகல் வேளையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது, இதனிடையே கடந்த 2 தினங்களாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் ஓய்வுக்காக வருகை புரிந்து நேற்று பிரையண்ட் பூங்காவை கண்டு ரசித்தார்,இதனையடுத்து இன்று நட்சத்திர ஏரி பகுதிக்கு வந்த அவர் நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி மேற்கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக மழை பெய்ததால் நட்சத்திர ஏரியில் நடுவில் இருந்தபடி பெய்த மழையை ரசித்து முண்டாசு கட்டியப்படி படகு சவாரி மேற்கொண்டார், படகு சவாரி முடித்த பின்னர் கரைப்பகுதிக்கு திரும்பிய வரை கண்ட சுற்றுலா பயணிகள் அவருடன் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்தனர்.