பாலீத்தின் பையில் ஆண் குழந்தை சடலம் - போலீசார் விசாரணை
அரியலூரில் நகராட்சி கழிவறை கதவில் மாட்டப்பட்டிருந்த பாலிதீன் பையில் இருந்த ஆண் குழந்தை சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்,
Update: 2023-10-20 08:26 GMT
அரியலூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள நகராட்சி கழிவறை கதவில் பிளாஸ்டிக் பை ஒன்று மாட்டபட்டு இருந்தது. இந்நிலையில் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்று அதனை திறந்து பார்த்தபோது 5 மாத ஆண்குழந்தை சடலமாக அதில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அரியலூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.