கிருஷ்ணகிரி அருகே விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்

கிருஷ்ணகிரி அருகே விடுமுறை முடிந்து பணிக்கும் செல்லும்போது கார் விபத்தில் பலியான இந்திய ராணுவ வீரரின் உடல், ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2024-04-05 14:55 GMT
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்

 கிருஷ்ணகிரி அருகே விடுமுறை முடிந்து பணிக்கும் செல்லும்போது கார் விபத்தில் பலியான இந்திய ராணுவ வீரரின் உடல், ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • whatsapp icon
 கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 24 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக டெல்லி அருகில் உள்ள இஸ்சார் என்ற இடத்தில் அவில்தராராக புரிந்து வந்தார்.

இந்நிலையில் ராஜேந்திரன் விடுமுறையில் தனது சொந்த ஊரான பாலேப்பள்ளிக்கு வந்து உள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இரவு ரயில் மூலம் மீண்டும் டெல்லி செல்வதற்காக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சோலார்பேட்டை சென்றுள்ளார், அப்பது பர்கூர் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் வந்த வண்டி மீது வேகமாக மோதிய விபத்தில் ராணுவ வீரர் ராஜேந்திரன் தூக்கி வீசியதில், பலத்தக்காயத்துடன் பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதனை அடுத்த அவரது உடல் பாலேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு இந்திய ராணுவ அதிகாரி ராஜ்குமார் தலைமையில் ராணுவ வீரர்கள் தேசிய கொடியை போர்த்தியும், மலர்வளையமும் வைத்து அஞ்சலி செலுத்தி மனைவி மற்றும் குழந்தைக்கு ஆறுதல் கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்களின் மரியாதையுடன் ராஜேந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது, இறந்து போன ராணுவ வீரருக்கு ஜோதி என்ற மனைவியும், சரண் என்ற மகனும் உள்ளனர். விடுமுறை முடிந்து பணிக்கு செல்லும் போது வாகனம் மோதி இந்திய ராணுவ வீரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News