நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் வாலிபர் சடலம் !
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - இரணியல் ரயில் தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தலை துண்டாகிய நிலையில் காணப்பட்டார்.;

போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - இரணியல் ரயில் தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தலை துண்டாகிய நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் தெரிந்ததும் நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த பயணிகள் ரயில் ஆளுநர் அருகே நடத்தப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல் கிடந்த பகுதியில் செல்போன் அடையாள அட்டைகள் எதுவும் உள்ளதா என்பதை சோதனை செய்தனர். இறந்து கிடந்தவரின் போட்டோவை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் காட்டி விசாரணை நடந்தது. மேலும் உடல் துண்டகி கிடந்தவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.