விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் உயிரிழந்த மதுரை தெற்குவாசலை சேர்ந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.;
Update: 2024-01-03 12:05 GMT
விபத்தில் உயிரிழந்த மதுரை தெற்குவாசலை சேர்ந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக்ராஜா (வயது23). இவர் தனது நண்பர் விக்னேஷ்குமாருடன் சம்பவத்தன்று பைக்கில் நத்தம் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் பரளிபுதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக்ராஜா இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கார்த்திக்ராஜாவின் உடல் மதுரைராஜாஜி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.