பொக்லைன் வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்
குலசேகரம் அருகே குளத்தில் தூர்வார சென்ற பொக்லைன் வாகனம் தீ வைத்து எரிப்பு.;
Update: 2024-03-27 11:40 GMT
பொக்லைன் வாகனம் எரிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள முண்டவிளை, கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் அஜில்குமார். இவர் சொந்தமாக பொக்லைன் வாகனம் வைத்து மண் எடுப்பதற்காக வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.சம்பவத்தன்று விலவூர்கோணம், வேங்கோட்டு குளத்தில் தூர்வாருவதற்க்காக அஜில்குமாரின் பொக்லைன் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. அன்றைய வேலை முடிந்ததும் வாகனத்தை குளத்தின்ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் சென்றுவிட்டார். மறுநாள் காலை சென்று பார்த்த போது வாகனத்தின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து நாசம் ஆகியிருந்தது. யாரே மர்ம நபர் கள் தீ வைத்து எரித்து இருப்பது தெரியவர, அஜில் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து குலசேகரம் போலீசில் இன்று புகார் அளிக்கப்பட்டது புகார் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.