சுரைக்காய் ரூ. 1.50: விற்பனை விவசாயிகள் கவலை

ஆலங்குளம் சந்தையில் சுரைக்காய் ரூ. 1.50: விற்பனை விவசாயிகள் கவலை.

Update: 2024-03-25 05:59 GMT

சுரைக்காய் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சுரைக்காய் விளைச்சல் அதிகரித்த காரணத்தால் அதன் விலை வெகுவாகக் குறைந்து ரூ. 1.50 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆலங்குளம், சுற்றுவட்டார பகுதிகளில் காய்கனி ப யிா்களான கத்தரி, வெண்டை, பூசணி, சுரைக்காய், சீனி அவரை, மிளகாய், தக்காளி போன்ற பயிா்கள் அதிக அளவில் பயிரிடப் படுகிறது. விளையும் காய்கனிகள் ஆலங்குளம் மற்றும் பாவூா்சத்திரம் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஆலங்குளம் சந்தையில் அன்றாட வரவைப் பொருத்து காலையிலேயே விலை நிா்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கமிஷன் அடிப்படையில் காய்கனிகள் கொள்முதல் செய்யப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே, சுரைக்காய் வரத்து அதிகரித்த காரணத்தால் கிலோ ஒன்றுக்கு ரூ.1.50 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. வழக்கமாக ரூ. 3 முதல் ரூ. 10 வரை விலை நிா்ணயம் செய்யபட்ட நிலையில் தற்போதய விலை விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. செடி பராமரிப்பு, பூச்சி மருந்து இடுதல், தண்ணீா் பாய்ச்சுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு வேலைகள் உள்ள நிலையில் குறைந்த பட்சம் இதன் விலை ரூ. 7 ஆக இருந்தால்தான் ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லையென்றால் அதிக நஷ்டம் தான் என விவசாயிகல் கூறுகின்றனா். இதனிடையே ஆலங்குளம் சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட மற்ற காய்கனிகளின் விலை நிலவரம்: வெண்டை -ரூ. 10, சீனி அவரை- ரூ. 15, புடலை -ரூ. 4, தக்காளி- ரூ. 6, சாம்பாா் வெள்ளரி- ரூ. 6, தடியங்காய் -ரூ. 7, பூசணி -ரூ. 5-8, எலுமிச்சை- ரூ. 60-80, மாங்காய்- ரூ. 30.
Tags:    

Similar News