மணலுார்பேட்டையில் நீரில் மூழ்கி சிறுவன் சிறுமி பலி

மணலுார்பேட்டை அருகே நீச்சல் பழக சென்ற சிறுவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2024-04-25 07:08 GMT

மணலுார்பேட்டை அருகே நீச்சல் பழக சென்ற சிறுவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணலுார்பேட்டை அருகே நீச்சல் பழக சென்ற சிறுவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுப்புலட்சுமி,12; மகன் கார்த்திக்,11; இருவரும் அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முறையே 6 மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர்.

பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து இருவரும் நேற்று காலை தங்களது நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். மதியம் 12:00 மணி அளவில் கார்த்திக் தனது அக்கா சுப்புலட்சுமிக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதாக கூறி, அருகில் இருந்த கிணற்றில் இறங்கி குளித்தனர். அப்போது கிணற்றின் ஆழப்பகுதிக்கு சென்ற சுப்புலட்சுமியை காப்பாற்ற சென்ற கார்த்திக்கும் நீரில் மூழ்கினார்.

Advertisement

இந்நிலையில் விளையாட சென்ற பிள்ளைகள் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடிப்பார்த்தபோது கிணற்றில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்த மணலுார்பேட்டை போலீசார் விரைந்து சென்று, சிறுவர்கள் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News