சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
கம்பத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.;
Update: 2024-06-22 06:39 GMT
கம்பத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் சாய்குமார் இவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஆனால் காவல்துறைக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் சிறுவனின் உடலுக்கு வீட்டில் இறுதி சடங்குகளை செய்தனர் இது குறித்து தகவல் அறிந்த கம்பம் காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சாய்குமார் உடல்கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்