காதல் விவகாரத்தில் சிறுவன் - சிறுமி கடலில் குதித்து தற்கொலை !!
திருவொற்றியூரில் 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டு, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-25 10:22 GMT
தற்கொலை
திருவொற்றியூரில் 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டு, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். சென்னை மாதாவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இருவரும் கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுவர், சிறுமி இருவருக்கும் டியூஷனில் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 7 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.