பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு
திருவெண்ணைநல்லூர் அருகே பாம்பு கடித்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.;

திருவெண்ணைநல்லூர் அருகே பாம்பு கடித்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் மருதமலை. இவரது மகன் அய்யனார் (வயது 15). இந்நிலையில் காலை தனது கூரை வீட்டில் அய்யனார் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று அய்யனாரை கடித்தது. இதில் வலியால் அலறி துடித்த அவனை உற வினர்கள் மீட்டு சிகிச்சைக்காக இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துவிட்டு அய்ய னாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப் போதுவீட்டுக்கு செல்லும் வழியில் அய்யனார் மயங்கி விழுந்தான். இதையடுத்து சிகிச்சைக் காக அவன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம் னையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், அய்யனார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்துமருதமலை கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.