வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்,வழக்கறிஞர்கள் பிப்ரவரி 19ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து ஒரு நாள் அடையாள நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
Update: 2024-02-19 15:41 GMT
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்,வழக்கறிஞர்கள் பிப்ரவரி 19ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து ஒரு நாள் அடையாள நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் பிப்ரவரி 18ம் தேதி மாலை நடைபெற்றது. கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.02.2009 ம் தேதி அன்று தமிழக காவல் துறையால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் கொடுரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருவதை இச்சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, வழக்கறிஞர்கள் தொடர்ந்து இந்நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிப்ரவரி - 19ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளிலிருந்து விலகி இருப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி வழக்கறிஞர்கள் ஒரு நாள்பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் இதனால் நீதிமன்றம் பணிகள் சிறிது பாதிக்கப்பட்டன.