நாமக்கல்லில் பிரம்மா வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி - 2023

நாமக்கல்லில் பிரம்மா வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி - 2023

Update: 2023-12-22 17:12 GMT

பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் மற்றும் பிரம்மா வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி - 2023 நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி துவங்கியது. இன்றைய சமுதாயத்திற்கு தேவையான புதிய படைப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்த வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ், உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், தொழில்துறை சம்பந்தமான நிறுவனத்தினர், கட்டுமான சம்பந்தப்பட்ட பொருட்கள், வங்கி மற்றும் காப்பீடு சம்பந்தமான முகவர்கள் உள்ளிட்ட அரங்குகளும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 90-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி துவக்க விழா எக்ஸ்போ சேர்மன் பி.குமரேசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், பிரகாஷ், கணேசன், சக்திவேல், லோகநாயகன், ராஜேந்திரன், நடராஜன், பழனிவேல், ராஜ்குமார், பிரபு, சங்கர், கோபி, ராஜா, காளிமுத்து, நவீன்குமார், நவீன் ஆதித்யா, சந்தோஷ்குமார், பெருவழுதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் குழந்தைகளுக்கான வீடியோ கேம்ஸ், ஜம்பிங் விளையாட்டு, துப்பாக்கி சுடுதல், மெஹந்தி, மேஜிக் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் நாள்தோறும் குழுக்கள் முறையில் ஐந்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளனர்.

Tags:    

Similar News