விளாச்சேரி கால்வாயில் உடைப்பு - வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்

Update: 2023-12-27 07:46 GMT

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கன்மாயிக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்நிலைலயில் நிலையூர் கம்பிக்குடி பாசன கால்வாயின் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கன்மாயிக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்நிலைலயில் நிலையூர் கம்பிக்குடி பாசன கால்வாயின் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பாசன கால்வாயில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போதெல்லாம், இதுபோன்று அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொதுப்பணித்துறையினர் உடனடியாக கால்வாய் உடைப்பை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News