லால்குடி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு: பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு.வீணாக கசிந்து செல்லும் குடிநீர. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-23 10:32 GMT
உடைந்து வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் முன்பு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக குடிநீர் கசிந்து வீணாக செல்கிறது என கூறப்படுகிறது.
இதனால் கல்வி நிறுவனத்திற்கு வரும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து மாணவர்களின் சிரமத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.