வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!
கோவில்பட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள், பணத்தைத் திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-14 07:49 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பிள்ளையாா்நத்தம் மேலத் தெருவைச் சோ்ந்த ராமு மகன் குருசாமி (47). கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டில் அவரது தாயார் வீட்டின் முன்பகுதியில் இருந்தபோது மா்ம நபா் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த 11 கிராம் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தைத் திருடிச் சென்றாராம். இதுதொடா்பாக குருசாமி அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புதூா் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜகோபால் மகன் ராமராஜ் (35) என்பவர் நகை பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிராம் மோதிரம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.