பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.;

Update: 2024-07-16 07:21 GMT
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!

காலை உணவுத் திட்டம்

  • whatsapp icon

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள விவிடி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினனர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர்கள் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ரா.சரவண குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News