வீட்டின் பூட்டை உடைத்து நகை ,பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் துறையூரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 10 சவரன் நகை 80 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.;

Update: 2024-05-19 05:43 GMT
வீட்டின் பூட்டை உடைத்து நகை ,பணம் கொள்ளை

திருட்டு நடந்த வீடு 

  • whatsapp icon

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன்.இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார்.நீலகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெறும் விசேஷத்திற்காக நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் இரவில் மணிமாறன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.காலை மணிமாறனின் தங்கை மகேஸ்வரி அண்ணன் வீட்டுக்கு சென்ற பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.மேலும் மோப்ப நாய் மற்றும் தடையியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர் . இச்சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை,பணத்தை திருடி சென்ற  மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News