மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-15 08:01 GMT

மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் மஸ்ஜிதுர் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் லூர்தம்மாபுரத்தில் பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவர் அகமது இக்பால், பள்ளிவாசல் நிர்வாகிகள் சுலைமான், முஹம்மது, நவாஸ், தமுமுக மாநகர பொறுப்பு குழு தலைவர் மெட்ரோ ஷேக்,முன்னாள் மாநகர செயலாளர் அப்துல் சமது, கிளைச் செயலாளர் நூர்,ரபீக், யஹ்யா, அப்துல்லாஹ், சம்சு, பள்ளி இமாம் அத்கர், மற்றும் தன்னார்வலர்கள் இம்முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News