பட்டா வழங்க லஞ்சம் - வி.ஏ.ஓ கைது

தென்காசி அருகே பட்டா வழங்க ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-13 02:47 GMT

வி.ஏ.ஓ கணேசன் 

தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூரை சேர்ந்த செல்லையா என்பவர் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்.அவரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டு முன் தொகையாக ரூ.20 ஆயிரம் லஞ்சமாக நேற்று மாலையில் தலையாரி சுப்பிரமணியம் மற்றும் விஏஓ கணேசனை ஆகியோர் வாங்கியபோது தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதர், தலைமையில் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, எஸ்ஐ ரவி மற்றும் எஸ்எஸ்ஐ. தெய்வக்கன்ராஜா, உள்ளிட்டோர் விசாரணை நடத்தி கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News