குமரி : திருமணமான 45 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை .

Update: 2023-12-14 03:41 GMT
தற்கொலை செய்து கொண்ட காயத்ரி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (37).இவர் அந்த பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (32). இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இரு வீட்டு சம்மதத்துடன் இந்த திருமண நடைபெற்றுள்ளது . இந்த நிலையில் திருமணம் ஆன சில நாட்களில் கணவன் மனைக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காயத்ரி மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு வீட்டில் உள்ள அறையில் காயத்ரி தூக்கில் தொங்கி உள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர்.

Advertisement

பரிசோதித்த டாக்டர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர், இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  காயத்திரி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் ஆன 45 நாட்களில் காயத்திரி தற்கொலை செய்து இருப்பதால் ஆர். டி. ஓ  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News