குடும்ப தகராறில் தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன் கைது

ஓசூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த தம்பியை, வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-04-05 14:09 GMT

பைல் படம்

ஓசூர் அருகே குடும்ப தகராறில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணன் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமான நிலையில், திருமணம் ஆகாத உடன்பிறந்த அண்ணன் லட்சுமிநாராயணன்(31) தம்பி மனைவியுடன் தகாத உறவு இருந்ததால் வேணுகோபால் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது .

Advertisement

இந்த விவகாரத்தில் சகோதரர்கள் இடையே அவ்வப்போது குடிபோதையில் தகாரறு ஏற்ப்படுவதாக சொல்லப்படும் நிலையில் நேற்றிரவு இருவரும் குடி போதையில் இருந்ததாகவும் தூங்கிக்கொண்டிருந்த. தம்பி வேணுகோபாலை அண்ணன் லட்சுமிநாராயணன் விடியற்காலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தலைமறைவானார் பேரிகை போலிசார் உயிரிழந்த வேணுகோபால் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லட்சுமிநாராயணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Tags:    

Similar News