கொடுத்த கடனை தர மறுத்ததால், உறங்கும்போது தீ வைத்த சகோதரன் கைது

கரூர் அருகே கொடுத்த கடனை தர மறுத்ததால், உறங்கும்போது தீ வைத்த சகோதரன் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-24 15:35 GMT

தீ வைப்பு

கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட குருணை குளத்துப்பட்டி அருகே உள்ள கள்ளுகடை மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கணேசன் வயது 43. இவரது உடன் பிறந்த சகோதரர் இளவரசன் என்கிற பாஸ்கர் வயது 40.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இளவரசன் என்கிற பாஸ்கர் அவரது உடன் பிறந்த சகோதரர் கணேசனுக்கு ரூபாய் 2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு, பாஸ்கர் கணேசனிடம் கேட்டுள்ளார். ஆனால், கணேசன் பணத்தை திரும்ப தர மறுத்துள்ளார்.

இதனை மனதில் வைத்துக் கொண்டு பாஸ்கர் மார்ச் 22ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், கணேசன் உறங்கிக் கொண்டிருந்த வீட்டு கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது கதவை திறந்து கொண்டு வெளியே வந்த கணேசன் உடைகள் மீது தீ பற்றியதால் அவரது உடலில் 64% தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ தடுப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கணேசன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொடுத்த பணத்தை திருப்பி தர மறுத்ததால்,

உடன் பிறந்த சகோதரன் என்று கூட பார்க்காமல் ,கொலை செய்யும் நோக்கோடு தீ வைத்த இளவரசன் என்கிற பாஸ்கர்-ஐ கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags:    

Similar News