மலர் கண்காட்சிக்கு தயாரான பிரையண்ட் பூங்கா

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மலர்களால் ஆன சேவல், மயில், 360 செல்ஃபி பாயிண்ட், உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-17 03:43 GMT

 மலர்களால் ஆன சேவல் 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம், இந்நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக மலர் கண்காட்சி இன்று துவங்கி 10நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மேலும் பிரையண்ட் பூங்காவில் கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுகள் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டு தற்போது பல வண்ணங்களில் பல வகைகளில் வித விதமாக பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது, மேலும் மலர்களால் ஆன சேவல், மயில், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், வண்ணத்து பூச்சி, வீடு, பொம்மைகள், நெருப்பு கோழி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றது, அதே போல பார்வையாளர்கள் அமர்வதற்கு இடம், அலங்கார மேடைகள், பூ தொட்டிகள் வைக்கும் இடம் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே போல கோடை விழாவில் நடைபெறும் நாய் கண்காட்சி, மீன் பிடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சைக்கிள் பந்தயம், வாலிபால், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மற்றும் பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News