மலைக்கிராமங்களில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மலைகிராம விவசாயிகள் அவதியடைந்து/ள்ளனர்.

Update: 2024-04-27 00:57 GMT

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மலைகிராம விவசாயிகள் அவதியடைந்து/ள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், குண்டுபட்டி, கிளாவரை,பூண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்பட்டுவருகிறது, மேலும் இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் சேவை மட்டும் கிடைப்பதால் 30,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பி.எஸ்.என்.எல் சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் , இந்நிலையில் கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்தாகவும், இதனால் வங்கி பரிவர்த்தனைகள் கூட சரி வர செய்ய இயலாமலும், அவசர தேவைக்கு கூட கைபேசிக்கு அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மேல்மலை கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவசர தேவைகளுக்கு கூட 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கொடைக்கானலுக்கு நகர் பகுதிக்கு வந்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதாக மலைகிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மழை காலங்களிலும், அதிக வெப்பம் காரணமாக வன பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக அடிக்கடி மின்விநியோகமும் தடைப்படுவதால் இங்கு உள்ள பிஎஸ்என்எல் டவருக்கு தேவையான மின்சாரமும் நிறுத்தப்படுவதால் தொலைதொடர்பு அடிக்கடி பாதிக்கப்படுவதாக மலைவாழ் மக்கள் புகார் கூறுகின்றனர். இதனை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் கவனம் செலுத்தி மேல்மலை கிராமங்களில் தோலை தொடர்பு தடையில்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தடையில்லாமல் சேவை தொடர யூபிஎஸ் அல்லது சென்செட் போன்ற சாதனங்களை அமைக்க வேண்டுமென மேல்மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News