பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-03-05 12:54 GMT

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. 

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.

துணை பொதுச்செயலர் பொன்முடி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் புகழேந்தி வரவேற்றார். எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர சேர்மன் தமிழ்ச்செல்வி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாநில மகளிரணி தேன்மொழி, ஒன்றிய செயலர்கள் தெய்வசிகாமணி, ராஜா, விஸ்வநாதன், ரவிதுரை, மாணவரணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் இளங்கோவன் சிறப்புரையாற்றி பேசியதாவது: பெண் கல்விக்கும், அவர்களது உரிமைக்கும் திராவிட ஆட்சிகள் தான் வழிவகுத்தது. தொடர்ந்து, இப்போதும் பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி., வரியை அறிமுகப்படுத்தி, மாநிலங்களுக்கான வரி விதிக்கும் உரிமையை மத்திய அரசு பறித்தது. ஜி.எஸ்.டி., வரியால் மாநிலங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு, தொடர்ந்து 5 ஆண்டுகள் இழப்பீடை வழங்குவோம் என்றனர். ஆனால், வழங்காமல் நிறுத்திக்கொண்டனர். இந்த வகையில் தமிழகத்துக்கு, ரூ.10 ஆயிரம் கோடி வரி இழப்பு வழங்காமல் வஞ்சிக்கப்படுகிறது. விவசாய விளைபொருளுக்கு ஆதார விலை வழங்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை காங்கிரஸ் குப்பையில் போட்டுவிட்டது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே செயல்படுத்துவோம் என்று கூறிய பிரதமர் மோடி, இன்று விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து அவர்களை வஞ்சித்துள்ளார். தொடர்ந்து பா.ஜ., அரசு பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. பொது துறை நிறுவங்களில், அந்த மாநிலத்தவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற விதியை மீறி வடமாநிலத்தவர்களை திணிக்கின்றனர்.

பல வங்கிகளில் வெளி மாநிலத்தவர்கள் தான் வேலையில் உள்ளனர். திமுகவை இந்து விரோதி கட்சி என்கின்றனர். இந்து மதத்தில் உள்ள பிற்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காகவே திமுக தொடங்கி செயல்படுகிறது. நிதி நெருக்கடியிலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் திட்டத்தை முதல்வர் வழங்கியுள்ளார் என பேசினார்.

Tags:    

Similar News