வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

தேனி மாவட்டம், வடுகபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-29 08:43 GMT

திருட்டு 

தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது மனைவியுடன் ஜூன் 7-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். மீண்டும் ஜூன் 25ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நான்கு பவுன் செயின் ஒரு பவுன் பேபி செயின் 7 கிராம் தோடு மற்றும் பத்தாயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News