வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு - போலிசார் விசாரணை
திருக்கோவிலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை சவரன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-06 05:28 GMT
பந்தநல்லூர் அருகே தேநீர் கடையில் திருட்டு
திருக்கோவிலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை சவரன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி, 57; இவரது மருமகள் பிரசவத்திற்காக கடந்த 2ம் தேதி வேலுார் சென்றிருந்தார். இவர் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதால், காயம் அடைந்த ஜெயக்கொடி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து 4ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பேக்கில் வைத்திருந்த ஆறரை சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயக்கொடி அளித்த புகாரின் பேரில், திருப்பாலபந்தல் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.