அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து - பயணிகள் காயம்

தேவகோட்டை அருகே அரசு பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்;

Update: 2024-06-18 04:48 GMT

விபத்துக்குள்ளான பேருந்து 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அரசு போக்குவரத்துக் கழக தேவகோட்டை கிளை பணிமனையில் தேவகோட்டை அதன் சுற்றுவட்டார பகுதி பல்வேறு கிராமங்களுக்கு 22 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 70% பேருந்துகள் முற்றிலுமாக கட்டுப்பாடு இன்றி இயக்கப்படுகிறது, இந்நிலையில் காரைக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாக 20 க்கும் மேற்பட்ட பயணிகளோடு தேவகோட்டை நோக்கி வந்த 3A அரசு நகரப் பேருந்து சிறுமருதூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் நடத்துனர் கண்ணன்(50) உட்பட பயணிகள் 13 பேர் காயம் அடைந்தனர். இதில் நடத்துநர் கண்ணன் மற்றும் பயணி மேலசெம்பொன்மாரி பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மாவிடுதிக் கோட்டையைச் சேர்ந்த ராமு மனைவி ஐந்து மாத கர்ப்பிணி தேவி(32) என்பவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து ஆறாவயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News